வியாழன் கவிதை

சிவதர்சனி

வியாழன் கவி 1705
காரணம் தேடுகிறோம்!
புதிது புதிதாய்த் தினமும் கற்றும்
புரியாத விடயங்கள்
புவனத்தில் உண்டு!

முயன்று தினமும்
உழைத்து சேர்த்தும்
இல்லாமை வந்தே
வாட்டுவது உண்டு!

விட்டுக் கொடுத்து
விருப்பு அறிந்து
பழகிக் கொண்டும்
பிரிவினை சூழ்வது கண்டோம்!

நம்மை நாமே
நியாயப் படுத்தி
நிம்மதி தேடியே
பிழைத்துக் கொள்ள
காரணம் தேடுகிறோம்!
சிவதர்சனி இராகவன்
13/10/2022