வியாழன் கவிதை

சிவதர்சனி

வியாழன் கவி 1701!
என் வகுப்பறை
ஆளுமைகள்!🙏

புரியாத வயது தொட்டு
…புரிகின்ற வயது வரை
மழலையின் ஆரம்பம்
….கண்டு இற்றை வரை
மனதோடு நிலைத்த
….மறப்பற்ற வரமாம்
தொடர்கிறது வகுப்பறை ஆளுமைகள் இன்னும்
வரம்பற்ற தேடலின் விதியாய்!

எழுத்தைக் கற்றது முதல்
எண்ணத்தைப் பகிர்வது வரை
பரீட்சை வசப்பட்டது முதல்
பக்குவம் வந்தது வரை
சுயமாய்ச் சிந்திக்க கற்றது தொடக்கம்
சுதந்திரமாய்ப் பகிர்வது வரை
ஏற்றி வைத்த ஏணிகள்
எம் வகுப்பறை ஆளுமைகள்!!

பொறுமை அன்பு பண்பு
ஒழுக்கம்
பேச எழுத வாசிக்க நேசிக்க இன்னும்
கற்க கற்பிக்க தெளிய
தேனாய்த் திகட்ட
தேட அறியப் பகிர இன்னும்
இன்னுமாய்
முன்னே சென்று முயன்று கற்றுப்
பின்னே வந்த நமக்குள்
விதைத்த வீரியங்கள்
எம் வகுப்பறை ஆளுமைகள்!!

நன்றியோடு நாளும் நினைப்பதும்
நல்ல நூல்களாய்
..நேசிப்பதும் அவர்
காட்டிய பாதையில்
பயணிப்பதும்
தந்ததை அடுத்த
சந்ததிக்கு அருள்வதும்
நம் கடமையாம் அதுவே தான்
வகுப்பறை ஆளுமைகளுக்கு
நாம் அளிக்கும் மகிழ்வாகும்!
சிவதர்சனி இராகவன்
5/10/2022