வியாழன் கவிதை

சிவதர்சனி

வியாழன் கவி 1697!

உழைப்பே உரமாகும்!
உழைப்பே வாழ்வினுக்கு உரமாகும்
உயர்ந்திடத் தரமான வரமாகும்
விடியலில் ஆரம்பம் கண்டே மெல்ல
விரைந்திடும் பொழுதுகள் துணை ஆகும்!

உறுதியாகும் கரங்களும் சேர்ந்து
உணர்வினுக்கு துணை சேர்க்கும்
வரவும் மிஞ்சிய செலவுமிங்கே
வாழ்வியல் சவாலாய் விஞ்சி நிற்கும்!

நாளை எனும் எதிர்காலம் முன்னே
நாம் என்றும் தோற்றிடல் வேண்டா
கோழை என்றே சோம்பிக் கிடக்க
வேளை அல்ல இது வாழ்வின் தேவை!

நிறைவான செல்வம் மகிழ்வே என்றும்
போதும் எனும் நிலை கண்டாலே
ஓய்வு கேட்கும் உடலை ஆற்றி
நோயின்றி வாழ்தல் சிறப்பே ஆகும்!
சிவதர்சனி இராகவன்
29/9/2022