வியாழன் கவிதை

சிவதர்சனி

வியாழன் கவி 1674!
வாழிய பல்லாண்டு!
பாமுகத்துச் சாரதியும்
பாங்கிணைந்த பூமகளும்
பாரினிலே வாழியவே
பல்லாண்டு பல்லாண்டு!

இருமனம் ஒன்றாகி
இன்பங்கள் துணையாகி
இணைந்தன இருபத்தொடு
இன்னும் ஆறு அகவைகள்!

முன்னே நீவிர் தடம்பதிக்கப்
பின்னே நாமெலாம் அணிவகுக்க
அன்பகலா மகவுடனே வாழிய
என்றும் பூமழை நாம்தூவ!

இல்லறம் காத்த வாணியும்
சொல்லறம் சேர்க்கும் மோகனும்
வெல்லும் நாட்கள் துணைசேர
வேளையிது பல்லாண்டு வாழியவே!
சிவதர்சனி இராகவன்
18/8/2022