வியாழன் கவி 1670!
பசி
குறும்படம் சுருக்கெனத் தைத்தது மனத்தில்
உணர்த்திய பாடமோ அரியது மண்ணில்
கொடியது பசியெனும் கொடுமை
கண்டீர்
ஆற்றிட முடியாத ஆற்றாமை கொண்டார்!
பெற்ற பிள்ளை பசியால் வாடப்
பொறுக்குமோ பெற்றவர் மனமும்
களவாடும் பொழுதினில் கையும்
மெய்யுமாய்
அகப்பட்ட அந்த மனிதன் பரிதவிப்பு!
அறிந்தும் அறியாதவராய் ஆங்கே
இருவர்
ஆன்ம நேயம் கொண்டே செயல்படவே
இன்னும் மிச்சம் மீதி ஒட்டியே தர்மம்
வாழுது மண்ணில் போதுமே இறைவா!
பசியென்று வந்தால் இரங்கும் தருணம்
இமைக்கு முன்னே பசியாற்றும் கருணை
வரமாய்த் தருவாய் வளமாய்த் தருவாய்
பசியிலா உலகினைப் பண்புடன்
நெய்வோம்!
சிவதர்சனி இராகவன்
10/8/2022