வியாழன் கவி 1666!
மன்னிப்பு !
தவறுகள் செய்யா மாந்தர் இனம்
தடம் பதித்த பூமி உண்டா
தவறுக்கு வருந்திக் கேட்கும்
மன்னிப்பை விட பேறேதும் உண்டா!
உணர்ந்து திருந்தி வாழும்
உயரிய மனங்களைக் கண்டு
உன்னதம் இதுவே என்று -நிதம்
மகிழ்வு கொள்ளுதல் உண்டே!
தண்டித்தல் என்பதை விடவும்
மன்னித்தல் உயர்வின் பண்பே
மீண்டும் செய்யாது திருத்த
வழியாய் அமையும் மருந்தே!
உலக மன்னிப்பு தினமும்
ஆகஷ்ட் ஐந்தில் அமைந்து
அகிலம் விழிக்க வென்றே
ஐ நா ஆக்கியது அன்றே!!
சிவதர்சனி இராகவன்
4/8/2022