வியாழன் கவி 1662!
உலகாளும் நட்பே!
ஆளும் அன்பினில் அளவில்லை
அகிலத்தில் இதற்கு எல்லையில்லை
கூடும் குணத்தினை நாடும்
தேடும் களிப்பினில் ஆடும்!
வாடா மலரினம் நட்பு
வரையறையற்ற மெல்லினம் நட்பு
தேடலின் பொக்கிசம் இதுவே
தேனென இனித்திடும் நித்தம்!
இதயத்தின் வலியை ஆற்றும்
இடைவெளி நம்மில் மாற்றும்
இணைவுகள் தொடர்கதை யாகும்
இதற்கென இலக்கியம் சான்றாகும்!
நல் நட்பு வாய்த்திடல் பேரின்பம்
நாற்றிசை அளந்திட நினைத்திடும்
உறவினில் உயர்ந்தது இதுவே
உயிர்களின் யாசிப்பும் இதுவே!
சிவதர்சனி இராகவன்
28/7/2022