வியாழன் கவிதை

சிவதர்சனி

வியாழன் கவிதை நேரம்!
சிவதர்சனி கவி 1642!

வல்லமை தாராயோ!
வல்லதமிழ் சொல்லினிலே வார்த்தெடுத்த கவியொன்று
மெல்ல இரு செவி சேர
வரமொன்று தாராயோ
புவிமீது தடம்பதித்து
புகழ்பூத்த பாதங்கள்
புதைந்த தொரு மணல்காடு
விதையாகி எழும் நாள்
விடியல் ஒன்று வாராதோ!

கருமேகப் பரப்பினிலே
கரைந்தெழுந்த வானவில்
வருமழையின் துளிபட்டு
வளைந்ததொரு கோலத்தில்
சிறு மானின் கூட்டத்தில்
சிதறுண்ட ஒரு மானாய்
சிந்திவிடும் நேரத்தில்
சிதறாதே நம் எண்ணங்கள்!!
சிவதர்சனி இராகவன்
15/6/2022