வியாழன் கவிதை

சிவதர்சனி

வியாழன் கவிதை நேரம்!
சிவதர்சனி இராகவன்
கவி -1636

இது எழுத்தின் ஏற்றம்!
பழுதிலா மொழியதைப்
பாரினில் காக்க
உழியது கொண்டு
செதுக்கியே பேணக்
கருத்தினில் ஊன்றிக்
கவிவெனப் போற்றப்
படைப்பினை யாத்துப்
பக்குவமாய் வாழ்த்த
வந்ததோர் வாரமே
வரமெனத் தோன்றுதே!!

வேரின் ஊக்கம்
வெற்றியின் தேக்கம்
வேருக்கினிப் பழுதில்லை
வெல்லுவதே நோக்கம்
இருப்பின் வலுவே
இணைப்பின் பாலமே
நொடியும் ஆக்கமாய்
நோக்கம் நிறைக்குதே
காக்கும் ஊடகத்தின்
கண்ணியப் பயணம்
கலங்கரை விளக்காய்
ஒளிர்வது திண்ணம்!

சந்ததி தழைக்கச்
சரிதம் வரையக்
கூடியிணைந்தோம்
குன்றதில் ஒளிர
ஏற்றிவைத்த ஏணியே
என்றும் எழுச்சி தந்த
என்றனின் தாயே
வெள்ளியாய் நீ மின்ன
வேளையிது வாழ்த்துகிறேன்!
சிவதர்சனி இராகவன்
2/6/2022