வியாழன் கவிதை

சிவதர்சனி

வியாழன் கவி 1628!
நிலை மாறும் பசுமை!

இயற்கை தரும் அருங்கொடைகள்
உயர்ந்த வாழ்வின் உயிர் நிலைகள்
பசுமை தங்கும் புவிப் பரப்பில்
பாழும் வரட்சி வருதல் முறையோ!

தாவரங்கள் தரு பயன்கள் தான்
தவிப்பின்றி எமை வாழவைக்கும்
உயிர் மூச்சும் உண்ணும் யாவும்
நன்றியோடு நோக்கச் செய்யும்!

உண்டவுடன் ஓடிச் செல்ல நாம்
இவ்வுலகில் விருந்தாளிகளல்ல
நன்றிக்கடன் செலுத்தவேண்டும்
நம் தலைமுறைக்கும் காக்க வேண்டும்!!

பசுமைப் புரட்சி செய்து பயிர்காத்த
பண்புடையர் செயல் கண்டோம்
வேளாண்மை காத்தவர் கை போல்
காத்திடவே விழிப்புக் கொள்வோம்!

காடு வெட்டி நாடாக்கும் காலம்
கண்டோம் இயற்கையின் சீற்றம்
பயிர் வளர்த்து விடிவு காண்போம்
பசுமை காத்துப் பயன் ஈவோம்!
சிவதர்சனி இராகவன்
12/5/2022