வியாழன் கவி 1621!
வேண்டும் வலிமை!
உள்ளத்துள் வலிமை உண்டாகில்
உலகை வென்றிட முடியும்
இல்லை என்றே எண்ணத்தை
வளர்த்துவிடின் பொய்க்கும் புலமை!
பிறப்பில் ஏது ஏற்றத்தாழ்வுகள்
பிழைத்திட வேண்டும் வல்லமைகள்
குறைகள் தன்னை நிறைவாய் மாற்ற
திறமை தானே மருந்தாய் ஆகும்!
சாதனை ஏட்டில் பதிந்த மனிதர்
சோதனை பலதைக் கடந்த முனிவர்
வேதனை கண்டு ஒதுங்க வில்லை
வென்றதன் மகிமை காலம் சொல்லும்!
வலிமை வேண்டும் மானிடா-அதை
தெளிந்து வாழப் பழகிக்கொள்
வாழ்க்கை என்னும் ஆழி தன்னில்
வீழ்ந்தும் எதிர் நீச்சல் போட்டு வெல்!
குறையென்று ஒதுக்க வேண்டாம்
குன்றின் மீது ஒளிரச் செய்வோம்
மகுடம் சூட்டி அழகு பார்க்க
மலர்கள் யாவும் வாசனை வீசும்!!
சிவதர்சனி இராகவன்
28/4/2022