வியாழன் கவிதை

சிவதர்சனி

வியாழன் கவி 1617!

பூத்துக்குலுங்கும் புன்னகை!!

பூமிப் பெண்ணை நிறைத்து
புதுமை மண்ணில் படைத்து
பூங்காற்று மேனி வருடி
புதுராகம் மெட்டுக் கட்டி
புன்னகை எனும் வேதம்
புத்தெழில் அதில் ஒங்காரம்
புயலே உனக்குத் தடை
பூவாக மொட்டு உடை
புரிதல் கொள்ளும் மானிடம்
புதையல் ஆகும் தனித்துவம்
புறப்படு ஒரு கவி தொடு
பூவை வாழ்வு வளம் பெற
புதுயுகம் அது செவி தொட
புதுச் சேதி நம் பரிசாக
புல்லாங்குழல் ரீங்காரம்
பொல்லாங்கு மெல்ல விலகிடும்
எல்லோரும் நலம் வாழ
நல்லாசி வழங்கும் பூக்கள்..
நலவாழ்வை ஆக்கும் பாக்கள்!!!

சிவதர்சினி ராகவன்
20.4.19