வியாழன் கவி-1613
சித்திகள் தருவாய் சித்திரையே!
எத்திக்கும் விடியல் எழுச்சி கொள்ள
ஏக்கங்கள் தாக்கங்கள் விலகிக்
கொள்ள
சித்திகள் தரவே பிறந்தனையோ
சித்திரையே இத்தரை மெல்ல வந்தாய்!!
வித்தகம் கொண்டே விதையிடவே
விருட்சமாய் வாழ்வு வளம் பெறவே
பங்குனி மங்கை சோதரியாய்
மலர்ந்தனையோ மாதவம் என்றிங்கே!!
முத்திரை ஒன்றை பெற்றிடவே
முகவரி தன்னை நிலை நாட்டிடவே
உந்தன் கரமும் பற்றி விட்டோம்
உயர்வாய் உலகை உயர்த்திடுவாய்!!
சிவதர்சனி இராகவன்
14/4/2022