வியாழன் கவிதை

சிவதர்சனி

வியாழன் கவி 1581!

உருமாறும் புதிய கோலங்கள்!

உருமாறும் புவி மீதில்
எத்தனை எத்தனை கோலங்கள்!
கருவாகி எருவாகும் வரை
மாறாது தொடரும் சாலங்கள்!
தரு மீதில் தவ வான் மீதில்
தகை நெறி மீதில்பரவும் மாற்றங்கள்
சிரம் மீதில் சிகரம் போலும்
ஏற்றம் பெறுமேஎழுச்சி கொள்ளுமே

கொறோனா என வொன்று
எமை வென்று உயிர் தின்றதே-பின்!
உரு மாற்றம் அதில் பல பரிமாணம்
ஊசியேற்றம் உள்ளத் தடுமாற்றம்!
பருவ மாற்றம் அபாய எச்சரிக்கை
அதன் பலாபலனோ பரிதாபம்!
உண்டாகும் போரின் ஆரம்பம்
உக்றைன் உக்கிரமாய்ப் பதற்றம்!

பனிகால இடமாற்றம் பரிமாறும்
விழி பற்பல அழகேற்றம் அரிதாரம்!
பணியோடும் பற்பல கற்பனை சேரும்! களிப்பு பொங்கும் கனியும்!
மனம் மீதில் மகிழ்வு பூக்கும்
மங்களம் பொங்கும் விழா சேரும்!
உருமாறும் புதிய கோலங்கள்
உணர்வாக்கும் உதட்டின் பூக்கள்!
சிவதர்சனி இராகவன்
17/2/2022