வியாழன் கவிதை

சிவதர்சனி

வியாழன் கவி-1731

சிவனே என்று இருந்துவிடு!

எத்தனை முறை
முயன்றாலும்
தோற்றுப் போகும்
வேளைகளும் உண்டு
எனக்கெதற்கென்று
இருக்கும் வரை
வெற்றியும் வருவதுண்டு!

முயலுகின்ற வழிகள்
கண்டு மெல்ல
இயலாமை விலக்கி
கொள்ள வேண்டும்
இன்னும் தடுக்க வரும்
கரங்களை மெல்ல
இயல்பாய் விலக்கியே!

தன்னைத் தானே
பாவம் பார்த்து
தனக்குத் தானே
ஆறுதல் சொல்லி
வாழுகின்ற சிலபேர்
வாழத்தான் செய்கிறார்!

உதவி என்று வந்து
உபத்திரவம் செய்ய
உதவும் கரங்கள்
வேண்டாம் உன்கரம்
உனக்குத் துணை!
சிவதர்சனி இராகவன்
31/11/2022