வியாழன் கவிதை

சிவதர்சனி இரா

வியாழன் கவி 1733!

மனித நேயம்

உணர்வோடு உயிர்ப்போடு கலந்திருக்க வேண்டிய பண்பு!

உணர்ந்து மனிதர் காக்க வேண்டிய பண்பாடு பல மனங்களின் கூப்பாடு!

இன மத பேதங்கள் விடுத்து என்றும்
இயல்பிலே வளர்த்திட
வேண்டிய நிகழ்வு!

பசியறிந்து உணவிடலும்
பகை விடுத்து கரம் கொடுத்தலும் பாவச் செயல் விடுத்து வாழ்தலும் இதன் வழி!

அள்ளிக் கொடுப்பவர் சிலர்
கிள்ளிக் கொடுப்பவர் சிலர்
வழி காட்டிச் செல்பவர் சிலர்
வலி மாற்றிச் செல்பவர் சிலர்!

கழிந்த காலங்கள் மீளா இனி இருக்கும் காலம் வீணாகா
பிழைக்க வைக்க வாய்ப்பு வரின்
உழைப்பை உவந்தும் காக்கலாம் மனித நேயம்!
சிவதர்சனி இராகவன்
8/12/2022