வியாழன் கவிதை

சிவதர்சனி இரா

வியாழன் கவி 1772!

“நிமிர்வின் சுவடுகள்”

ஏல ஏலோ ஐலசா
எலேலேலோ ஐலசா…

ஆத்துக்குள்ள மீன்பிடிக்க போகவில்லை ஐலசா
மன தேக்கத்தில
நினைவிருக்கு
மீட்டுவரப் போறமிங்கே!!

மூத்தோரே தெய்வமுங்க
முந்தி வந்து சொன்னோமுங்க
வாழ்ந்து போன சுவடுகளில் வளமிருக்கு அறியுங்க!!

பாட்டன் பூட்டன் காலத்திலே
பாதையெங்கும் விளை நிலமாம்
விதைத்ததெல்லாம் முத்தாச்சு
நம்ம மூச்சினிலே கலந்தாச்சு!!

காத்து நின்ற தெய்வமுங்க
காலம்த ந்த பரிசிவங்க
சேர்த்து வச்சு தந்தாங்க நல்ல
சேதி சொன்ன வள்ளலுங்க!!

வாழ்ந்து போன
தடங்களெல்லாம்
தாழ்ந்திடாம நிமிருதிங்கே
தோத்து போக மாட்டோமுங்க
சந்ததியாய்க் காப்போமுங்க!!
சிவதர்சனி இராகவன்
1/3/2023