வியாழன் கவிதை

சிவதர்சனி இரா

வியாழன் கவி 1761!

பேரிடர் தந்த வலி!
போரெனப் பொருளாதார நெருக்கடி என ஆண்டு ஒன்றாய் இடைவிடாது தொடரும் ரஷ்யா உக்ரைன் உக்கிரப் போர் தந்த வலி
மனித உயிர்கள் பலி
திண்டாடும் உலகினில்!!

புதிதாய் வந்து பூகம்பம்
ஒன்று பல்லாயிரம்
உயிர்களைக் காவு வாங்கி இன்னும் இன்னும் மண்ணில்
புதையுண்டோர் தேடப்பட இது என்ன விதி!!

பதினோராயிரம் தாண்டிய அற்புத உயிர்கள் அந்தோ பரிதாபம்
பொறுமை இழந்த பூமித்தாயின் கொடூரப் பழி வாங்கலோ இது
வான் தொடும் கட்டிடங்களும் அதிர்ந்தே மண்ணில் சரிய அத்தனையும்
புதையுண்டுபோய்!!

மோப்ப நாய்கள் தம்பணியிலே
இறந்த உடலும் உயிர் ஊசலாடும் உடலுமாய் சிரியா துருக்கி படும் துயரம் மனம் மிக வலிக்க!!
சிவதர்சனி இராகவன்
8/2/2023