வியாழன் கவிதை

சிவதர்சனி இரா

வியாழன் கவிதை நேரத்துக்காக!!
கவி -1749
பெருகிடும் வலிமை
பெற்றுயரத் தடையேது?!

உழைப்பும் அதன் வழி ஊக்கமும்
நிலைப்படுத்தலும் அது
தந்த உறுதியும்
இல்லறமும் இணைந்த
குழந்தைகளும்
சூழ் நிலையும் அவை நல்கிய அனுபவமும்
யாவும் நமக்கு நல்
வலிமையாம்
உணர்ந்தெழ யாது தடையாம்?

பழக்கப்படுத்திய கால நிலைகளும்
பக்குவப்பட்ட வாழ்வியல் மாற்றங்களும்
சந்தித்து வென்ற தோல்வியின்
பாதைகளும் நமக்கு
நட்பாகிப் போயிருக்க
வலிமை பெற்றோம்
ஏது இங்கே தடை!!

வலிமை என்பது நம் எண்ணக்கருவில்
புரிதல் என்பது நாம்
தெரிந்தெடுத்த வழிகளில்
தெளிதல் என்பது நமக்கு எஞ்சிய தலைமுறைகளில்
ஆளுமை நம் கைகளில்
வலுச்சேர்க்க வலிமை
நமக்குள் இருப்பானது
அதற்கு தடையை இடுவது யார்?
சிவதர்சனி இராகவன்
19/1/2023