வியாழன் கவிதை

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1723!

விளங்கிக் கொள்ளாதது ஏன்!

அறிவுகள் ஆறு
ஆற்றலின் வேராய்
அமைந்தது மானிடப்
பேறு அது பெரும் ஆணிவேரு!!

அறிவுக் கண்கள்
அழகுடன் திறக்க
ஆற்றலுடைக் கல்வி
அவசியம் உணர்ந்து
கற்றே உயரும்
மானிடம் தன்னால்
மதிக்கும் பாரும் !!

புரிதல் என்பதே
அரிதாகிப் போக
சொல்வதைக் காதில்
ஏற்காது போகும்
சிந்தை அற்ற மனங்கள்
எப்படிச் சிகரம்
தொட்டிட முடியும்?!
சிவதர்சனி இராகவன்
17/11/2022