வியாழன் கவிதை

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1780!

ஆகா! வியப்பில் விழிகள்!

அம்மாவா அக்காவா
அத்தனை பேரும்
அவா பட்டு வினவ
அத்தனை பூரிப்பு
அந்தத் தாய்க்குள்!

ஈரெட்டு வயதில்
இணைத்த இல்லறம்
இரு ஆண்டுகளுக்கு
ஒன்றாய் ஈன்ற மகவுகள்
தலைச்சாண் பையன்
தொடர்ந்த தைந்தும்
பெண்கள்!!

அம்மாவின் ஆடைக்கும்
அலங்காரப் பொருளுக்கும்
நகை
நட்டுக்கும் போட்டியாய்
பஞ்சானும் குஞ்சுமாய்
பிள்ளைகள்!!

இடையே காலன்
கவர்ந்த கணவனின் பிரிவு
தனை நிமிர்த்தித்
தன் காலில் நின்று
கரையேற்றி இன்றும்
கனடா தேசத்தில்
தன்கையே தனக்குதவி
என்றே வாழும் என்
அம்மா!!
ஆகா என் அதிசயம்
வியப்பில் விழிகள்
விரிந்தன வரிகள்!!
சிவதர்சனி இராகவன்
15/3/2023