வியாழன் கவிதை

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1874!

இறக்கைகளின் விசையிலே!

இயங்கும் நிலை இழந்து
அப்பப்போ தவிக்கும் நிலை
இறக்கை விரிக்கும் பறவை
தன்னைப் பார்த்துப் பொறாமை
இறைவன் கொடையில் ஏதோ
வஞ்சக நிலைமை – இதுவே
இருப்பதை விடுத்துப் பறப்பின்
பேராசை அது நிராசை நிலை…!

யாருக்கு எதைக் கொடுப்பது
இயற்கை வகுத்த நியதி
பேருக்கும் புகழுக்கும் ஓடுவது
மனித வாழ்வின் ஒரு பகுதி
கிடைப்பது எதுவாயினும்
ஏற்பது இவள் வெகுமதி
கிணற்றுத்தவளை வாழ்வில்
எதுவுமில்லை பெறுமதி
எதற்கும் அஞ்சாதே மனமே
வாழ்ந்துவிட வேண்டும் உறுதிமொழி!
சிவதர்சனி இராகவன்
28/9/2023