வியாழன் கவிதை

சிவதர்சனி இராகவன்

என்று தீரும்!

தீராத வலியோடு
தீர்ந்து போகும்
இவர் வாழ்க்கை..
நீறாகிப் போனதோ
நீத்தே தான்போனாரோ
அறியாத ஏக்கம்..!

பெற்றவருக்குத் தான்
தெரியும் பிள்ளையின்
பிரிவின் வலி
உற்றவரே உணர்வார்
உறவுகளின் நிர்க்கதி!

விடையற்ற வினாவாக
விளைவு குன்றிய செயலாக
இன்னும் தொடரும்
எல்லையில்லா ஏக்கம்..!

காலங்களை நீட்டியும்
கண்மூடிய போக்கும்
உயிர்களை மதியா அரசும்
வீணாகிப் போகுது தேசமும்..!

யாரால் முடியும்
ஐ நா அன்றி அந்த ஆண்டவன்
அல்லது அதை மீறிய
ஏதேனும் சக்தியுண்டா
சொல்லுவீர் அறியா
எந்தனுக்கு…!
சிவதர்சனி இராகவன்
23/8/2023