வியாழன் கவிதை

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1850!

வீணாய்ப் போகும்
பணங்கள்!

கலையை இரசிக்கும்
உள்ளம் அது வரமே
உணர்வில் கலந்த
வண்ண ரகமே
உழைத்துச் சேர்க்கும்
பணத்தில் மிகவே
வீணாய்ப் போகுது
இசை நிகழ்வில் கரைந்தே…!

சினிமா இசையில்
மோகம் நிறைந்து
சிதறியே கூட்டம்
பின்னே போகுது
பணத்தின் மீது
குறியாய் ஒரு சிலர்
கூட்டியே அள்ளிப்
பையிலே போடுறார்..!

விலை ஏற்றம்
அனுமதிச் சீட்டும்
முண்டியடித்து நுழைவும்
இப்படிப் போனால்
என்னாகும் பணமும்
இளைய தலைமுறை
இதனை உணருமோ?…
சிவதர்சனி இராகவன்
16/8/2023