வியாழன் கவி- 1842
வாழ்வியல் ஓட்டம்!
நிற்காது ஓடும்
சக்கர ஓட்டம்
நின்றுவிட்டால் மாறும்
பெயரின் மாற்றம்
உயிரின் பயணம்
உன்னத ஆட்டம்
உணர்வுடன் இணைந்த உலகியல் ஏற்றம்…!
நிலைக்கும் என்றெண்ணும்
மனிதக் கூட்டம்
நிம்மதி இழந்து
தவிப்பதும் வாட்டம்
அனுபவம் காண்பது
அதில் ஒரு தேட்டம்
அழகியல் இரசிப்பதில்
தொலைந்திடும் துயரம்…!
விதியெனும் பாடம்
மதியெனும் தேர்வு
மனத்திடம் கொளும்
தேர்ச்சி அறிக்கை
முடிவு காணும்
வாழ்வியல் ஒரு நாள்
முடிவிலி காணா
தொடர்வது ஓட்டம்..!
சிவதர்சனி இராகவன்
12/7/2023