வியாழன் கவிதை

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1838!

“வரப்புயர”..
புலம்பெயர் வாழ்வினிலே புகுந்தவை ஏராளம்
இழந்தவை தாராளம்
இருப்பவை மிகுதியிலே
புதிர்களின் தேரோட்டம்..

வரப்பு உயரவே
விலகுது உறவு நிலை
பெருகுது இடைவெளி
உருகுது அன்பு மனம்
இளகியே நில்லாமல்
இறுக்கமாய் இளையோர் மனம்..!

வரப்புகள் உயர
நீர் வளம் பெருகும்
ஔவை மொழி அன்று
வரப்புகள் இட்டு
சிறப்பினை இழக்கும்
சீரற்ற வாழ்வியல்
மாற்றமாம் இங்கு…!
சிவதர்சனி இராகவன்