வியாழன் கவிதை

சிவதர்சனி இராகவன்

தினக்கவி 1753!

தலைக்கனம்!

சுமைகள் மெல்ல
ஏன் மேன்மையாய்
நமை அழுத்தும் தருணம்!!
அமைந்த நொடிகள்
ஆர்ப்பரிக்கும் அலை
என்றே அசைக்கும்
கணங்கள்!!
இமைக்க முடியா
இழைந்த அவசரத்தின்
பொழுதுகள் அணிவகுக்கும் நொடிகள்!!
போதும் இனிப் போதும்
மெல்ல அமைதி காணும் இதயம் ஓய்வு
கேட்கும் தலைக்
கனமும் குறைக்கத்
தோன்றும்!!
இது தலைக்கனம்
அல்ல தலையின் கனம்
பாரச்சுமையின் சினம்!!
சிவதர்சனி இராகவன்
26/1/2023