வியாழன் கவிதை

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1816!

பொசுக்கிய தீயும்
பூத்திட்ட பொலிவும்!!

தமிழர் பண்பாட்டின்
பேராலயம் எரியூட்டி
ஆண்டுகள் நாபத்துடன்
இரண்டு
நயமாய்க் கடந்தும்
நம் மனங்களில்
அதன் வடுக்கள் இன்னும்
தங்கியே விட்டது!!

தென்கிழக்காசியாவின்
பெரும் நூல் அகம்
அக்கினிக்குள் சங்கமம் காண
அக்கினிக் குஞ்சுகளாய் அவை
மீண்டெழுந்தும்
மூலம் எரிக்கப்பட்டது
பெரும் துரோகமே!!

அறிவின் இருப்பிடம்
பண்பாட்டின் மையம்
பலர் முயற்சியின் தேட்டம்
பேரினவாத அரக்கத்
தனத்தால் அழிந்தது
ஆற்றொணாத் துயரம்
துரோகத்தின் சாட்சியம்!!

புதுப் பொலிவுடன்
அன்னைத் தமிழாய்
மீள எழுந்து நிற்கும்
நூலகத் தாய் ஆக்குவாள்
இன்னும்
ஆற்றலுடை மாந்தரை
கூட்டுவாள் தமிழர்
பண்பாட்டின் வேர்களை
வீழ்வது நியதியானாலும்
எழுந்து நிற்பது நீதி
என்பதைப் பறை சாற்றி”!!
சிவதர்சனி இராகவன்
24/5/2023