வியாழன் கவிதை

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1813!

மாறாத மனம்!

ஆறாத காயங்களை
அப்பப்போ பரிசளித்து
செல்கிறது வாழ்க்கை
புன்னகைக்கும் புது
விடியலுக்கும் அப்பப்போ விடுமுறை
விட்டு செல்லுகிறது விதி!!

நம்பிக்கையும் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றம் தருவது தான்
நியதி என்றால்
நாணயமாய் அதைச்
செய்து போகிறது காலம்!!

இதுவும் கடந்து போகும் என்றுவிட்டால்
அதுவே இதுவாய்
அகல வாய் திறந்து
விழுங்கிக் கொண்டல்லவா போகிறது!!

தொடக்கப் புள்ளியில்
கச்சிதமாய்க் கொணர்ந்து
வீழ்த்தி விடும் சக்கரச்
சுழலுகை அது
இனி எதைக் கொண்டும் ஆற்ற முடியாப் புது வலி முறை!!
சிவதர்சனி இராகவன்
17/5/2023