வியாழன் கவிதை

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1803
வளர்ந்த குழந்தைகள் தாமே!

கோடி உயிர்களில் ஒன்றாய்
இப்பூவுலகினில் கருக்
கொண்டே உதிக்க
மாந்த இனத்தில்
மண்போற்ற வாழ்ந்திட
தாய் மடி உதித்து
தமிழ்த் தேன் அருந்தி
தருவாய் விழுதாய்
தந்த வளர்ந்த குழந்தைகள்
தாமே!

விழுந்தாலும் எழுந்து
விருப்போடு பகிர்ந்து
உணர்வோடு அணைத்து
உயர்வான
இவர் சிந்தனை
பிறர் தடுக்க வேண்டாம்
சிறப்பெனக் காண
நமை உயர்த்த வேண்டும்!

பெற்றவர் மகிழ்வில்
பெருமை தங்க
உற்றவர் உராய்வில்
வலியும் எஞ்ச
முடங்காது முரணாகாது
சிந்தை சிறக்க தம்
செயலாற்றும்
வளர்ந்த குழந்தைகள்
தாமே!
சிவதர்சனி இராகவன்
26/4/2023