வியாழன் கவிதை

சாதிக்க வேண்டும்

சாதிக்க வேண்டும்

சாதனை செய் சால்புடன் நின்று
சோதனை வந்தாலும் சோம்பியும் விடாதே
வேதனை என்று விலகியும் ஓடாதே
போதனையாய் சொல்கின்றேன் சாதனை செய்

சின்ன வயதிலே ஊக்கமும் தேவையே
சின்னமலர்களாய் விரிந்துமே மிளிர்ந்திடல் நன்றே
சீரோங்கும் நிலைக்கு நின்றிடவும் வேண்டும்
சீலமதில் நீயும் சாதனை செய்

கல்வியும் கலைகளும் கலாச்சாரமும் தேவையே
கற்றதை உணர்ந்து நிற்பதும் அழகே
கருணை கொண்டே வாழ்தலும் நன்றே
காலமும் வாழ்த்தவே சாதணை செய்

படிப்படியாய் முன்னேறு பகுத்தறிவுடன் திகழ்ந்துவிடு
பாவமும் இழைக்காதே பாரினில் மேலோங்கு
பரிவுடன் என்னாளும் ஒப்பரவாய் ஓங்கிவிடு
தெரிவாய் தெளிவாய் அறிவாய் சாதிக்க வேண்டும்

சர்வேஸ்வரி சிவருபன்