சந்தம் சிந்தும் கவிதை

-சர்வேஸ்வரி சிவரூபன்-

இயற்கை அன்னை மடியிலே
மலர்ந்த குழந்தைகள் நாமன்றோ
எழில் கொஞ்சும் நிலைதனிலே
நித்திய சுவாசம் இயற்கை தானே

இயற்கை ஒரு நொடி நின்று
விட்டால் -இந்த
பிரபஞ்சம் அடங்கிவிடும்
இன்பம் தருவதும் இயற்கை தான்
துன்பம் தருவதும் இயற்கை தான்

காசினி குளிர்வதும் இயற்கை தான்
காடுகள் துளிர்வதும் இயற்கைதான்
கடல் கொந்தளிப்பதும் இயற்கை தான்
எரிமலை வெடிப்பதும் இயற்கை தான்

இயற்கை என்பது இனிமையானது
இயற்கை என்பது முனிவருமானது
சீற்றம் கொண்டால் நாசம் நேரும்
இன்பம் கொண்டால் குளிர்மையாகும்
இயற்கை என்பது நீதியாகும்
இயற்கை இல்லையே நாம் இல்லை