ஊக்கம்
^^^^^^^^^^^
ஊக்கமது இல்லையேல்
ஆக்கமது இல்லையே
உணரவில்லையேல் விழிப்பும் இல்லையே பாரில்
தெளிவோடு சிந்தனையும் சிதறாமல் பெருகிவிட
கனிவாக நற்காரியமும் கருத்தோடு தேறிடவும்
கல்விக்கு தேவை ஊக்கம்
வாழ்விற்கு தேவை ஊக்கம்
உண்மைக்கு தேவை ஊக்கம்
உயர்வுக்கு தேவை ஊக்கம்
ஊனமில்லாதது உழைப்பின் நிலையும்
உறுதி கொண்டால் வெற்றி நிச்சயம்
மாற்றமில்லாத மனிதனின் முயற்சி
ஆளுமை கொண்டது அதிகாரத் தோற்றம்
மாண்பு கொண்டது மானிடப் பிறப்பு
வீண்புகழ் இல்லையே ஊக்கம் இருப்பதும்
காண்புகழ் சிந்தக் கொள்ளுவாய் ஊக்கம்
சர்வேஸ்வரி சிவருபன்