குழல் ஓசை
ஏழுஸ்வரங்களிலெத்தனை இன்பம்
இனிய கீதங்களைக் கேட்கும்போது எத்தனை மாற்றம்
புதிய கீதை வந்தது போல் புல்லாங்குழலோசை
புவி விளங்க வந்ததுவே காக்கும் அவன் கரத்தில்
கார்குழலில் வண்டார்ப்ப
கண்ணன் கரத்தில் புல்லாங்குழலாப்பர்
ஆயர்பாடியில் தாலேலோ
ஆனந்தக் குழலோசை கேட்டிடுமே
பிருந்தாவனம் போல் நம்மனமும்
பிரியாமல் குழலோசையில் மயங்கிடுமே
கவலை கொண்டு தானிருந்தாலும்
கானம் கேட்டதும் கனிந்திடுமே
குழலிசை ,யாழிசை, நாதஸ்வர இசை
குழலிலசை நாதத்தை தட்டும் மோசை
இயலிசை நர்த்தனமாடிடுமே
இதய ராகம் மிதந்திடுமே
கல்தோன்றி மண்தோன்றி மனிதன் தோன்றும் போதே
கானங்களின் ஓசைகளும் கலந்து நின்றது
கல்லும் கனியும் தேவ கானம் கேட்டால்
காலத்தில் கீதமாய் பரவியது குழலோசையுமே.
கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽