குருதிப் புனல்
&&&&&&&&&&<<<&
புனல்போல் பாய்கின்றது பறப்பாட்டின் வேகங்கள்
கனலாய் கொதிக்கின்றது பேரழிவின் நிதர்சனங்கள்
சனல்சனலாய் காட்டுகின்றனர் ஆபத்தின் கட்டங்கள்
குருதிப்புனல் தானமென்று குழுவிலே பதிவுகளும்
ஏனையா இந்தக் கொடுமை எகிறிய ஓட்டமேனோ
முக்கிய தேவைக்கு முகம்கோணாமல் கொடுக்கலாம்
பாரையா நாடும் பதைபதைத்தும் போவதை
யாரையா சொல்வது தானாக உணருமட்டும்
வீணாகக் குருதியோ வீதியிலே புனலாகி
கானல்நீராய் கனவுலகில் வாழ்கின்றனர்
பார்போகும் போக்கைப் பாரு
தந்தனத் தன்னானே
சீரில்லா ஓட்டமையா
தந்தனத் தன்னானே
வீறுகொண்ட செயல்களினால்
தந்தனத்தன்னானே
வெடித்துப் பாய்கின்றது
குருதிப் புனலாக…