சந்தம் சிந்தும் கவிதை

சர்வேஸ்வரி சிவரூபன்

விழிப்பு
^^^^^^^^^^^

வியக்கும் வண்ணம் விளிப்பாய் விழிப்புடன்
பயக்கும் படியே பணிந்தே விழிப்பாய்
களிக்கும் இன்பம் கனிந்துமே கொள்ள
பழிப்புக்கள் இன்றியே விழிப்பாய் நன்றே

உணர்வு கொண்ட எண்ணமதிலே
ஊழல் இல்லாத கொள்கைதனிலே
உத்தம குணத்தை உதாரணமாக்கி
உயர்வும் அடைய விழிப்பாய் நன்றே

வாழ்விலே எத்தனையோ போராட்டம் வருமே
வஞ்சகச் சூழ்ச்சிகள் வலிந்தே வருமே
விஞ்சிடும் நிலைக்கு விளைவுகள் நேருமே
துஞ்சிடும் நிலையின்றி விழிப்டாய் நன்றே

இனியும் கவலை எமக்கு இல்லை
இகமதில் இங்கிதம் தெரிந்தும் கொண்டே
இகழ்வுகள் அற்ற விழிப்புகள் வேண்டும்
இடுக்கண் அகன்றிட விழிப்பாய் நன்றே

சர்வேஸ்வரி சிவருபன்