சந்தம் சிந்தும் கவிதை

சரளா தரன்

சந்தம் சிந்தும் சந்திப்பு.
“விழிப்பு”

கண்னே
காதலியே
உன்னால் நான் விழிப்பு
உறக்கம் இன்றி விழிப்பு

உன்னோடு உரையாட விழிப்பு
உன் குரலை
உறங்க முன் கேட்க விழிப்பு

கண்ணால் கதை பேசி
கண் சிமிட்டும் காதலியே
கரு விழியும்
கர்னன் வில் புருவமும்
தெருவில் குனிந்த தலையும்
தேகம் எங்கும் என் நினைப்புமாய்
பக்குவம் கொண்ட
பத்தினிக்காய் நான் விழிப்பு

விடியல் உன் குரலால் விழிப்பு
விடிந்தோடும் நாட்கள்
உன்னால் விழிப்பு
உன் முகம் காண
உறக்கம் இன்றி நான் விழிப்பு

கருவை நீ சுமந்ததால்
கவலை ஏதுமின்றி
நமக்காய் …
நம் உறவுக்காய்-விழிப்பு

பிறப்புக்களின் உயர்வுக்காய்
பிரியமானவளே நீ விழிப்பு
உன் அன்புக்காய்
என்னவளே நான்
விடிய விடிய விழிப்பு
இதுவும் ஒரு வகை விழிப்பு
சரளா தரன்