சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு
ஆசை ஆசை
என்நாடு என்காணி
என்வீடு என்றே
ஏர்தொழில் விவசாயம் செய்திட ஆசை
நன்னிலம் தனிலே
நான்விதைத்த நெல்மணியால்
நன்றிகூறி கதிரவனுக்கு படைத்திட ஆசை
என்னவெல்லாம் வேண்டுமென இயற்கையிடம் கேட்டு எண்ணிஎயண்ணி படைத்திட எனக்கோர் ஆசை
சொன்னதெல்லாம் பலிக்க
வேண்டும் தாயே சொந்தபூமி வேண்டும் ஒன்றே ஆசை
பொங்கலோ பொங்கலென்று சொந்தம் கூடி
பொங்கிவர கூட்டமாய் குவளையிட ஆசை
திங்கள் பிறையொலியில் தெருமக்கள் கூடி
தங்கள் நட்புடன்
கதைபேச ஆசை
சிங்கம் எங்கள்
காளை சீறிஉழுது சங்கமித்த மண்தொட்டு முத்தமிட ஆசை
எங்களுக்கும் நாடு வேண்டும் கிடைத்தால் எங்கள் ஏக்கம்
தீரபொங்கி மகிழ ஆசை
நன்றி வணக்கம் சந்தம் சிந்தும் சந்திப்பிற்காக கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம்
இந்தியா🙏🏻🙏🏻🙏🏻
பணிசிறக்க பண்புடனே பணிவான
வாழ்த்துகள் சகோதரரே💐💐💐