சந்தம் சிந்தும் கவிதை

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு விடுமுறை ஓட்டமும் நடையுமாய் ஓடிஓடி உழைத்து ஓயாத கால்களுக்கு வேண்டும் விடுமுறை நாட்காட்டியை பார்த்து நாள்தோறும் காத்திருக்கும் நடைப்பிணங்களுக்கு வேண்டும் விடுமுறை தினங்கள் ஆறும் வேலைநாள் திகதிமாதம் வருடங்களாய் திங்களுடன் போராட்டம் மாற்றம் வேண்டும் விடுமுறை கடிகார முட்களை கண்டதும் கதறித் துடிக்கும் கண்கள் கண்ணுறங்க வேண்டும் விடுமுறை அரைகுறை நித்திரையில் நித்தம் அல்லாடி கண்விழிக்கும் தேகம் அயர்ந்து தலைசாய்க்க வேண்டும் விடுமுறை தீயாய் வேலைசெய்யும் தினங்கள் பாடாய்படுத்தும் திருப்பம் பெற்றிட வேண்டும் விடுமுறை அரசு விடுமுறை என்றாலும் அதையும் மறைக்கும் தனியார்கள் அவசரம் அவசியம் வேண்டும் விடுமுறை நன்றி வணக்கம் கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

சந்தம் சிந்தும் சந்திப்பு
கவிதை தலைப்பு விடுமுறை

ஓட்டமும் நடையுமாய்
ஓடிஓடி உழைத்து
ஓயாத கால்களுக்கு வேண்டும்
விடுமுறை

நாட்காட்டியை பார்த்து
நாள்தோறும் காத்திருக்கும்
நடைப்பிணங்களுக்கு வேண்டும்
விடுமுறை

தினங்கள் ஆறும் வேலைநாள்
திகதிமாதம் வருடங்களாய்
திங்களுடன் போராட்டம் மாற்றம் வேண்டும்
விடுமுறை

கடிகார முட்களை கண்டதும்
கதறித் துடிக்கும் கண்கள் கண்ணுறங்க வேண்டும்
விடுமுறை

அரைகுறை நித்திரையில் நித்தம் அல்லாடி கண்விழிக்கும் தேகம்
அயர்ந்து தலைசாய்க்க வேண்டும்
விடுமுறை

தீயாய் வேலைசெய்யும் தினங்கள் பாடாய்படுத்தும் திருப்பம் பெற்றிட வேண்டும்
விடுமுறை

அரசு விடுமுறை என்றாலும்
அதையும் மறைக்கும் தனியார்கள்
அவசரம் அவசியம் வேண்டும்
விடுமுறை

நன்றி வணக்கம்

கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா