சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு நெஞ்சம் பொருட்களையே
காத்திருந்தேன் பார்த்திருந்தேன் கவித்துவ தலைமை கவிஞர் ஆசிபெற விழியாலே பூத்திருந்தேன்
அலைபாரோ
அன்புகொண்டு
அவ்வப்போது
நினைவில்
கொண்டு
உழைப்பின் நடுவிலும் உயிர்த்துடிப்போடு நின்றிருந்தேன்
தாயக மண்ணில்
தமிழுறவை கண்டிருந்தேன்
நோயாக ஓரேக்கம் நொந்திருந்தேன்
உள்ளத்தில்
அகதி என்றே என்னையும்
அணுக வில்லையோ என்றெண்ணி
சகதி பூசிய முகமுடன் சற்றே அவமானத்துடன்
அமைதிகொள்
மனமே என்றேன் அழுகை அதையும் தாண்டி ஏனோ நெஞ்சை அடைத்துக் கொண்டது
மொழியாலும் நாடாளும் ஒன்றுபட்ட போதிலும் வாழிடமும் வாழ்வு முறையும் வேறுபட்ட நிலையன்றோ
நன்றி வணக்கம்
அண்ணா🙏🏻🙏🏻🙏🏻
( உள்ளத்தி ல் உதித்தது உதிர்த்து இருக்கேன் நான் இங்கே தவறு இருப்பின் மன்னிக்கவும்)
நன்றியுடன்
கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா🙏🏻🙏🏻🙏🏻