சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சிறீனி சங்கர்

வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு!
கவித்தலைப்பு
விருப்பு!

விருப்பு வெறுப்பு இரண்டும் கலந்தது மனிதவாழ்வு!
ஒருசில உடன்பாடுகளில் உறவுகள் ஒன்றாகும் மனங்கள் !
பிழைகளைச் சரிசெய்து தம்மைத்தாமே ஏமாற்றி
வெளிவேடம் போட்டுப் பாசாங்கு செய்யும் மனங்கள்!
தான் விரும்பும் மனிதர்களில் பிழைகள் அம்பலமானாலும்
நியாயதிபதியாய் வர்ணிக்கும் மனங்கள்!
இல்லாத காரணங்கள் தேடி
வெறுப்பால் தாழ்த்தும்
மனங்கள்!
மனசை மனசு வாசிக்கையில்
உள்ளத்தை ஆளும் மனிதர்கள் உயர்ந்து நிற்கிறார்கள்!

நன்றி வணக்கம்!