சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சிறீனிசங்கர்

இனிய இரவு வணக்கம்!

சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
நினைவுநாள்!

தேசத்தை நேசித்த நெஞ்சங்களாய்
பாசத்தைத் துறந்து
எண்ணற்ற கனவுகளோடு
களம் புகுந்து
எங்கள் நெஞ்சத்து நினைவோடு ஒன்றானீர்!
செந்நீரால் எங்கள் தமிழ்மண்ணைக் கழுவி
வெந்தணல் வேகிய வேங்கைகள்
சரித்திரம் படைத்த சாதனைச் சிகரங்கள்
கரிகாலன் வழியில் கவியமானவர்கள்
உரிமைக்காகப் போராடிய உத்தமர்கள்
எரிகின்ற தீயில் ஆகுதியானவர்கள் !
மனங்களில் நின்று நிலைத்துக்
கனத்த மாதமாய் கார்த்திகை
மண்மீட்கப் புறப்பட்ட மாவீரர்களே
கண்ணீர்ப் பூக்களால்
உங்கள் ஆன்மாவை வருடுகிறேன்!

வீர அஞ்சலி செலுத்தி
விடைபெறுகிறேன்.