வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
தீ
**
பஞ்சபூதங்களுள் ஒன்றான தீயைத்
தொழுதுகொள்கிறான்
செழுங்கவிஞன் பாரதி(தீ)
சிறுமைகண்டுபொங்கியவன் முழங்குகிறான்
தீமைகளை அழிக்கும் சக்தி (தீ)
அக்கினி வடிவான தீ
” எங்கள் வேள்விக் கூட மீதில் ஏறுதே தீ தீ
பங்க முற்றே பேய்க ளோடப் பாயுது தீ தீ”
பிரபஞ்சத்தின் மெய்ப்பொருளே
சுடர்விட்டு எரியும் ஞானத்தீ!
பரவசப்பட்ட பாரதி(தீ)
அக்கினிக் குஞ்சொன்றைக் கண்டான்!
சிறு நெருப்பே வெள்ளப் பெருக்காகி
அறியாமை நீக்கும்
அறிவுத்தீ!
எண்ணத்தின் எரிதழல்
உள்ளத்தின் உண்மை ஒளி!
நன்றி வணக்கம்!