சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சிறீனிசங்கர்

இனிய இரவு வணக்கம்
அனைவருக்கும்!
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
நிச்சயதார்த்தம்!

அறுசீர் விருத்தம்!
சீர் வரையறை: மா காய் மா/மா காய் மா
ஆண்பெண் இருபாலார் இணைவில்
ஆயுள் நாளெல்லாம் அவர்கள்
நீண்ட வாழ்க்கையதன் தொடக்கம்
நிச்ச யதார்த்தநாளில் பெரியோர்
சான்று பகர்ந்திடவே நிகழ்வு
சாலச் சிறந்ததுவாய் அமையும்
ஆன்றோர் வாழ்த்துரை க்கத் தட்டும்
ஆங்கே பரிமாறப் படுமே!
மஞ்சள் மலர்மாலை அழகு
மன்றம் நிறைந்திடுமே மகிழ்வு
நெஞ்சம் இரண்டும்தான் மகிழும்
நேரம் பண்பாட்டு முறையில்
மஞ்சம் அமைத்திடவும் உறுதி
மங்க லநாண்பூட்ட உறுதி
வஞ்சி அவளும்தான் வரமாய்
வரனும் கிடைத்ததிலே மகிழ்வாள்!
இரண்டு மனங்களுமே ஒன்றாய்
இனிதே இல்லறத்தில் இணையாய்
கரங்கள் கோர்த்துமேதான் காலம்
காலம் கனிவான வாழ்வில்
சுரமும் சேர்ந்தகானம் போலே
சுகமாய்ச் சுவைத்தேதான் வாழ
நிரந்த ரஜோடியாக இருக்க
நிச்ச யதார்த்தமும் வேண்டும்!

ப.வை.அண்ணா உங்கள் பணி பாரிய பணி! மிகுந்த வாழ்த்துகள் !
திரு.நடா மோகன் அவர்களே! களம் தந்து உற்சாகமூட்டும் உங்களுக்கும் மிக்க நன்றி!
கவிப்படைப்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள் கூறி
அன்புடனும் நன்றியுடனும் விடைபெறுகிறேன்.