சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சிறீனிசங்கர்

இனிய இரவு வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
அழகு
*******
இறைவன் படைப்பில் இயற்கை அழகு
இயற்கையில் இணைந்த
மனிதர் அழகு
மனிதரில் மங்கை அழகு
மங்கையின் கழுத்தில் மாங்கல்யம் அழகு
மாங்கல்யம் சூடிய மணாளன் அழகு
மணாளனுடன் சேர்ந்த
இல்லறம் அழகு
இல்லறத்தில் நல்லறம் அழகு
நல்லறத்தில் நன்மக்கட்பேறு அழகு
நன்மக்கள்பேற்றின்
வம்சம் அழகு
வம்சத்தில் வளரும் தமிழ் அழகு
தமிழில் “அம்மா”
மிகமிக அழகு!

நன்றி வணக்கம்!