வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு
நேரம்
*******
நேரம் போகுதில்லை என்பர் சிலர்
நேரம் போதவில்லை என்பர் சிலர்
விலைக்கு வாங்கவோ விற்கவோ
வாடகைக்கு எடுக்கவே கொடுக்கவோ
விரிக்கவோ சுருக்கவோ
கூட்டவோ குறைக்கவோ
முடியாதது நேரம்
எல்லோருக்கும் ஒரேமாதிரி இறைவனால் வரையறுக்கப்பட்ட வரம்!
நல்லநேரம் கெட்ட
நேரம்
நாசூக்காய் நாவிலிருந்து புறப்படும் நல்ல தமிழ் வார்த்தைகளே
தீதோ நன்றோ
நலனோ பலனோ வீணோ விரயமோ
ஒவ்வொரு கணமும்
ஓடிக்கொண்டிருக்கும்!
சேமித்து வைக்க முடியாதது நேரம்
சாமி கும்பிடவும் நேரம் ஒதுக்கிப்
பூமியில் வாழும்வரை
திட்டமிட்டால்
புதுமைகள் படைத்துப்
பூரிப்பாய் வாழலாம்!
நன்றி வணக்கம்.