ஊற்சாக வணக்கம்!
வியாழன் கவிதை நேரம்!
கவித்தலைப்பு
உள்ளம் கொள்ளை போகுதடா!
*************************************(கிராமியக்கவிதை)
உ
கள்ளம் இல்லை கபடமும் இல்லையடா
வெள்ளை உள்ளம் கொண்ட வீரனடா
அள்ளி அணைக்கத் தாவுதடா என்மனசு
அழகாய்ப் படமும் பிடிக்கிறாயோ தூரத்தே
தெரிகின்ற காட்சி தன்னில் சொக்கித்தான்
போனாயோ சொல்மகனே கமராவைப் பிடிக்கக்
கத்துக் கொடுத்தது யாருடா மகனே
உலகமே உன்கையில் ஊணர்கிறாயோ மகனே
உன்னைப் பார்க்கையில உயிரின் உயிரே
உள்ளம் கொள்ளை போகுதடா மகனே!
கவிதை நேரத் தொகுப்பாளினிகட்கு மிகுந்த பாராட்டுகள்!
திரு.திருமதி.நடா மோகன் அவர்களுக்கு மிக்க நன்றி கூறி
அன்புடனும் நன்றியுடனும் விடைபெறுகிறேன்.
நன்றி வணக்கம்!