சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சிறினிசங்கர்

இனிய இரவு வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
மாட்சிமை தங்கிய மகாராணி!

வரலாற்று நாயகி விடைபெற்ற மகாராணி
வரங்கள் பலபெற்று வாழ்விலே வந்த
சாதனைகளைப் புன்னகையால் சாதுரியமாய் வென்ற
சாதனைப் பெண்மணி சரித்திரத்தில் முதலிடம்
பெற்ற பெண்மணியாய் பேர்புகழுடன் விளங்கி
சுற்றும் உலகில் சிறந்த முன்மாதிரி
நல்லொழுக்கம் நிறைந்து நன்முறை ஆட்சியில்
பல்லோரும் வியந்து பார்த்த மகாராணி
ஏழு தசாப்தங்கள் ஏற்றம் கண்டு
வாழும் வரையில் வைரம் போலே
மிளிர்ந்து கொண்டு மிடுக்குடன் வாழ்ந்து
களிகூர் புன்னகையால் கவர்ந்திடுவர் அனைவரின்
மனத்திலும் இடம்பெற்ற மாட்சிமை தங்கிய
கனம்மிக்க காரிகை “கடவுளே என்சத்யம்”
என்ற பொருள்பட்ட எலிசபெத் நாமம்
என்றும் நிலைக்கும் எல்லோர் மனத்திலும்
பட்டத்தைப் பதவியைப் பாதுகாத்து எந்தக்
கெட்ட பெயரும் இல்லாதுஅரசை
நிர்வகித்த பெண்மணி நெஞ்சிலே கனிவுடன்
அர்ப்பணிப்பு சேவை அறிவிலே தெளிவு
அரண்மனையில் பிறக்கா அரசியிவர் அனைவரையும்
அரவணைத்த அம்மையார் அகிலம் போற்றுமே!

திரு.ப.வை.ஜெயபாலன் அவர்களே உங்கள் அரும்பெரும் பணிக்கு மிகுந்த வாழ்த்துகள்!
திரு.நடா மோகன் அவர்களே! களம் தந்து உற்சாகப்படுத்தும் உங்களுக்கு மிக்க நன்றி!
அன்புனும் நன்றியுடனும் விடைபெற்றுக் கொள்கிறேன்.
நன்றி வணக்கம்!