சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சிறினிசங்கர்

இனிய இரவு வணக்கம் !
சந்தம் சிந்தும் சந்திப்பு!
கவித்தலைப்பு
மனசுக்குள் மத்தாப்பு!

ஆடியில சேதிசொல்லி ஆவணியில் தேதிவைச்சு
கூடிமகிழப் போகிறோம கோடிஇன்பம் கண்டிடலாம்!
தினம் உன்னைச் சுமப்பதால் கனக்கிறது மனசும்தான்
பிரசவவேதனைப்படுகிறேன மான்குட்டியே உனைஅணைக்க
காத்திருக்கேன் அந்தநாள் கண்மணியே எப்பதான் வந்திடுமோ
சாத்திடுவேன் பூமாலை சாமியென உன்கழுத்தில்
மணமகளாய் வந்திடுவாய் மனையறம் காத்திடுவோம்
மனசுக்குள்ள வெடிக்குதடி மத்தாப்பு அறிவியோ?

திரு.சக்தி சக்திதாசன் அவர்களே மிகுந்த நன்றி!
திருமதி.வஜிதா முகமட் அவர்களே மிகுந்த நன்றி!
இருவரும் சேர்ந்து ஆற்றும் பணி போற்றுதற்குரியது. பாராட்டுகள்!
திரு.நடா மோகன் அவர்களே! களம் தந்து உற்சாகப்படுத்தும் உங்களுக்கும் பெருநன்றி!
நன்றி வணக்கம்!