சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
வான் மழை வருவே!
வான்மழையே நிலம்குளிரப் பெய்வாய்
வளம்பெருக நீவருவாய் இங்கே
ஏன் இந்த மழையென்று வேண்டாம்
ஏர்பிடிக்கும் உழவர்தம் வாழ்வில்
தேன்இனிமை சுவைசொட்ட வருவாய்
தேர்இழுத்து வழங்கிடவும் விடுவாய்
மான்மரையும் மகிழ்ந்திடவே வருவாய்
மாநிலமும் செழித்திடவே பொழிவாய்!
வரண்டதுவே என்தேசம் வெயிலில்
வருணனே வணங்கிடுவோம் தருவாய்
கரமேந்தி நிற்கிறோமே பொழிவாய்
கருணையுமே செய்வாயே நிறைவாய்
விரக்தியுமே நிறைந்திருக்கு வாழ்வில்
விவசாயம் விளைந்திடவே விரைவாய்
வரங்களுமே பெற்றிடுவோம் உன்னால்
வான்மழையே போற்றிடுவோம் என்றும்!
திரு.சக்திதாசன் அவர்களே மிக்க நன்றி!
திருமதி.வஜிதா முகமட் உங்களுக்கும் மிக்க நன்றி!
திரு.நடா மோகன் அவர்களே உங்களுக்கும் மிகுந்த நன்றி!